தாமரை குளம் நவ 17
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் 187வது அய்யா வைகுண்டர் பாத யாத்திரையை வரவேற்று சாமிதோப்பிலிருந்து பூஜிதகுரு பாலபிரஜாதிபதி தலைமையில் திருவனந்தபுரம் நோக்கி செல்கின்ற பயணத்தை வரவேற்று வடக்கு தாமரை குளத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் தா.சுபாஷ் சந்திர போஸ் தலைமை வகித்தார்.இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும் வடக்கு தாமரை குளம் பஞ்சாயத்து தலைவர் தோழர் வி.அருணாசலம் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.இசக்கிமுத்து,தக்கலை ராஜீ,வி.அருள்குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில துணைத்தலைவர் தோழர் தாமரை நடராஜன் குமரி மாவட்ட துணைத்தலைவர் ஆரல்பகவதி,ஆரல் சுப்பிரமணியம்,குருசாமி,பாலன் இசைக்குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஒய்.புஷ்பராஜ் தோழர்கள் நாகப்பன்,சாம், சிங் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வில் பெருந்தலைவர் காமராஜர் பேத்தி கமலிக்கு தோழர் வி.அருணாசலம் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். பாத யாத்திரை நிகழ்சியை ஒருங்கிணைந்த காமராஜ்க்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நிகழ்வில் திரளானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.



