திண்டுக்கலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ளும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் கடந்த ஒரு வருடமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி திண்டுக்கல் மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் தொடங்கி பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .