கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட சிங்காராபேட்டை, ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் வழக்கு பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார் குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான வழக்கு பாலியல் சீன்டல்,போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், காவல் ஆய்வாளர்கள் சந்திரகுமார், முருகன் உள்ளிட்ட தலைமை காவல் ஆய்வாளர்கள் உதவி காவலர்கள் கலந்து கொண்டனர்.