நாகர்கோவில் அக் 24
விவசாயிகள் பயன் பெரும் வகையில் தற்போது அனைத்து அஞ்சல அலுவலகங்களிலும் பயிர் காப்பீட்டு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள குமரி மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்து விடுத்துள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டின் ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2024-25 மத்திய, மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி, சோளம், நிலக்கடலை, கம்பு, சூரிய காந்தி, மிளகாய் , வெங்காயம், வாழை, நெல் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் பயிர் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சல அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும். வேறு கூடுதல் சேவை கட்டணம் கிடையாது. மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகலாம் என கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.