மதுரை அக்டோபர் 14,
மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் உள்ள கர்டர் பாலத்தின் கீழ் நிரம்பிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்களால் சரி செய்யப்பட்டு காலை 7 மணி முதல் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்தை நெரிசலை
திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. உடன் கரிமேடு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் சந்தானகுமார் உள்ளார்.
மணிநகரம் கர்டர் பாலத்தில் சீர் செய்யப்பட்ட இடத்தினை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ச தினேஷ்குமார் ஆய்வு செய்தனர்.