கன்னியாகுமரி அக் 13
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நாளான நேற்று அம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை காண மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் .பக்தர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தேநீர் வழங்கப்பட்டது.
இதனை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பக்தர்களுக்கு வழங்கினார்.
இதில்,நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தீபக் ,சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.