காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புலியூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் புலியூர், சாயனாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் M.ரவி,B.COM. தலைமையில் மன்ற துணைத் தலைவர்
P.முருகன். மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள். வேளாண்துறை அதிகாரிகள். கிராம உதவியாளர் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் நாகஜோதி ஊராட்சியின் 2024-2025 ஆண்ற்கான திட்டப்பணிகள் குறித்த விவரங்களை சபை முன் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து கிராம விரிவாக்கப் பகுதிகளான பாண்டியன் நகர். புலியூர் காலனி ஆகிய பகுதிகளுக்கு தெரு விளக்குகள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. குறித்தும் ஊராட்சியில் விடுபட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற விவரங்களை எடுத்துக் கூறினார்.
அதன் பின்னர் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் சாலைகளை தூய்மையாக பாதுகாக்கவும் ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதை தவிர்த்து டெங்கு கொசு பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் அனைவரும்
உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள்.
உட்பட கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.