தர்மபுரி அடுத்த லக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் 12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஜி. கே .மணி பெண்ணாகரம் சட்டமன்ற உறுப்பினர், எஸ். பி. வெங்கடேஸ்வரன் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர், எஸ்.ஆர். வெற்றிவேல் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ,பி. ராஜாராம் மூத்த சிவில் நீதிபதி( ஓய்வு),ஏ. சந்திராமேரி மாவட்ட மருத்துவ ஆய்வாளர்,எம். பழனிசாமி மாவட்டச் செயலாளர் அண்ணா தொழிற்சங்கம், எஸ். கலையரசன் அறுவை சிகிச்சை நிபுணர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வா. சௌந்தரபாண்டியன் ஆசிரியர் இவ்விழாவின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர் பா. கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார். கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இறுதியில்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



