கன்னியாகுமரி செப் 29
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆஞ்சநேயர் கோயில்களில் சிதறு தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அதன்படி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் கொட்டாரம் ஸ்ரீ ராமர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாரதனை ,வழிபாடு நடைபெற்றது .தொடர்ந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது .
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில பேச்சாளர் எஸ்.பி.அசோகன் ,ஒன்றிய தலைவர் செல்வன்,ஒன்றிய பொதுச் செயலாளர் எம்.ஆர்.சிவா ,கொட்டாரம் பஞ்சாயத்து தலைவர் ராஜன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.