ஈரோடு, செப். 13
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி, சர்வதேச இளைஞர் தினம் 2024-ஜ முன்னிட்டு, மாவட்ட எய்ட்ஸ் ,எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாராத்தான் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மாராத்தான் போட்டியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை சென்றடைந்தது. இந்த மாராத்தான் போட்டியில், 16 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு என இருபாலருக்கும் தனித்தனியே, முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில், எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை
வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் (நலப்பணிகள்) ம
அம்பிகா,
துணை இயக்குநர்( சுகாதாரப்பணிகள்)
சோமசுந்தரம், திட்ட மேலாளர் (மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு) துரைசாமி உட்பட துறை சார்ந்த அலுலவர்கள்
கலந்து கொண்டனர்.