கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, மத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மத்தூர் காவல் நிலையம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டது.
மத்தூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் காவல் துறையினர், பேருந்து நிலையம், கடை வீதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் சென்று பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வணிகர்களிடம் போதைப்பொருள் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரதிகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மத்தூர் உதவி ஆய்வாளர்கள் மனோகரன் மற்றும் கௌதம் ஆகியோர் உடன் இருந்தனர்.
போதைப்பொருள் ஒரு சமூகப் பிரச்சனையாக மாறி வருவதால், இது போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என காவல் துறையினர் தெரிவித்தனர்.