நாகர்கோவில் ஆக 11
நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசாரால் விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு ரூ 240000 அபராதம் விதிக்கப்பட்டது.
குமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில்,
கோட்டார் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர்
ராமன் புதூர் பள்ளி அருகே உள்ள சாலையில்
வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதி மீறல்களில் ஈடுபட்ட சுமார் 25 நபர்கள் மீது மோட்டார் வாகனச் சட்ட பிரிவுகளின் கீழ் 150 வழக்குகள் பதிவு செய்து ரூபாய் 240000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதம் செலுத்திய பின் முறையான பதிவு எண் இல்லாத வாகனங்களுக்கு முறையான பதிவு எண் பொருத்தி அனுப்பப்பட்டது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வாகனம் விடுவிக்கப்பட்டது.