மதுரை ஆகஸ்ட் 9,
மதுரை, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை” விழாவை இன்று (8-8-2024) துவக்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மதுரை தமுக்கம் மைதானத்தில் விழிப்புணர்வு வாகனத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைததார்கள். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.