திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கொத்த புள்ளியில் “கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ. நா. பூங்கொடி, இ. ஆ. ப., பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுப்புலட்சுமி சண்முகம், சுதா செல்வி, சுந்தரி அன்பரசு உட்பட பலர் உள்ளனர்.



