சங்கரன்கோவில்.ஜூலை.29.
சங்கரன் கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஆதி திராவிடர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் மஜரா பாஞ்சாகுளம் கிராமத்தில் உள்ள காலனியில் ஆதிதிராவிடர் பொதுமக்கள் சுமார் 26 குடும்பங்கள் 30 ஆண்டுகளாக ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்த நிலையில், இது குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் அவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மேலும் அந்த காலனி பகுதியில் சாலை வசதி குடிநீர் வசதி வாள் கால் வசதி மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகியன அமைத்து தர வேண்டுமென என மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் ஆர்டிஓ ஆலோசனையின் படி சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மற்றும் அதிகாரிகள் அங்கே நேரில் சென்று ஆய்வு நடத்தினர் அதனைத் தொடர்ந்து தற்போது அங்கு 30 குடியிருந்து வரும் ஆதிதிராவிடர் காலணியில் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 15 நபர்களுக்கு பட்டா வழங்கி உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 11 நபர்கள் நபர்களுக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஞ்சாகுளம் காலனி ஆதி திராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பட்டா வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு ஆதிதிராவிடர் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.



