திருப்பூர் ஜூலை: 29
திமுக ஆட்சியில் அருந்ததிய சமுதாய சுதந்திரப் போராட்ட தலைவர்களின் மணிமண்டபம் பணி அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கின்றது.
எதிர்வரும் ஆகஸ்ட் 20 அன்று சுதந்திரப் போராட்ட மாமன்னர் ஒண்டி வீரன் அவர்களின் 253 வது
வீர வணக்க நிகழ்வில் அனுசரிக்கப்பட உள்ளது.
அதற்குள் ஒண்டி வீரன் மணிமண்டபத்தை புனரமைத்து செய்து நூலகம் பூங்கா அமைத்து முழுமைப்படுத்த வேண்டும் மேலும் மணி மண்டபத்துக்குள் இருக்கும் ஒண்டிவீரன் சிலையை வெளியே எடுத்து மக்கள் பார்வை படும்படி மண்டப வளாகத்துக்குள் பீடம் அமைத்து அதன் மேல் சிலையை நிறுவ வேண்டும். என பல்வேறு தீர்மானங்கள். நிறைவேற்றி செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
செயற்குழு கூட்டத்தினை மாநில தலைவர்
ஆ. நாகராசன் தலைமையில் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் முன்னிலையில்.
கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.