தேனி மாவட்டம், ஜூலை – 5 தேனி மாவட்டம், உத்தமபாளையம் இந்தியாவில் போதை பொருள் இல்லாத நாடு என்ற நிலையை உருவாக்க இந்திய அரசாங்கம் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளது அவ்வழியில் தமிழ்நாடு போதை பொருள்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்களை இயற்றி கண்காணித்த வண்ணம் உள்ளது இருப்பினும் தற்போது போதை பொருட்களின் பயன்பாடு பொதுமக்கள் மட்டுமின்றி கல்லூரி பள்ளி மாணவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது அதனை தடுக்கும் வகையில் உத்தமபாளையம் SAB மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள்
பொதுமக்களிடம் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகளை கையில் பதாகையுடன் ” போதை பொருள் இல்லாத உலகே உருவாக்குவம்” என்ற முழக்கத்துடனும் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இவ் ஊர்வலம் பள்ளியில் ஆரம்பித்து கிராமச் சாவடி கோட்டைமேடு பஸ் நிலையம் பைபாஸ் போன்ற மக்கள் கூடும் வீதியில் சென்று பொதுமக்களிடம் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்