By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை அரசுக்கு கோரிக்கை

Last updated: June 20, 2024 12:02 am
June 20, 2024
173 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 19 

 

தூத்தூர் மண்டல விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை தேங்காய்பட்டணம் மற்றும் கொச்சிதுறைமுகங்களில் நடத்த வேண்டுமென சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை  தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை  நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளது. 

 

7.6.2024 தேதியிட்ட தமிழக மீன்வளத்துறை சார்பில் மேலக்குறும்பனை முதல் நீரோடி வரையிலான பங்குத்தந்தையர்கள்,  மீனவர் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியர்கள் மற்றும் விசைப்படகு சங்கங்களுக்கு அனுப்பட்டுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைக்குட்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், குளச்சல் (இருப்பு) தேங்காய்பட்டணம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் வைத்து மட்டுமே 19.6.2024  நேரடியாக வருடாந்திர ஆய்வு செய்யப்படு மெனவும் கேரளாவில் ஆய்வு நடத்தப்படாது எனவும் கூறப்பட்டிருந்தது.

இது மீனவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இது சம்பந்தமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவரும் சின்னத்துறை மீனவர் சங்கங்களின் ஆலோசகருமான ஜஸ்டின் ஆன்டணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

 

தூத்தூர் மண்டலத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் சீரமைப்புப்பணிகள் நடைபெறுவதால் எல்லா விசைப்படகுகளுக்கும் ஆய்வு நடத்த இயலாத நிலை உள்ளது. எனவே விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை 

கொச்சியிலும் நடத்த வேண்டுமென தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

 

ஜஸ்டின் ஆன்டணி மேலும் கூறுகையில், மீன்பிடித் தடைக்காலமானதால், குமரி மாவட்டம் மேற்கு கடற்கரைக்குட்பட்ட மீன்வளம் மீனவர் நலத்துறை குளச்சல் (இருப்பு) தேங்காய்பட்டணம் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பல விசைப்படகுகள், அதிலும் குறிப்பாக  தூத்தூர் மண்டல மீனவர்களின் விசைப்படகுகள் கொச்சியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மட்டுமே வருடாந்திர ஆய்வு செய்யப்படுமாயின் இது இம்மீனவர்களுக்கு வீண்செலவை ஏற்படுத்தும். மட்டுமல்லாது, கடற்சீற்றம் காரணமாக படகுகளுக்கும் சேதம் விளைய வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்களின் நலன் கருதி தமிழக அரசு விசைப்படகுகளுக்கான வருடாந்திர ஆய்வை கொச்சியிலும் நடத்த வேண்டும் என்றார்.

 

மனுவை பெற்றுக்கொண்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன்  இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
மாநகர் மாவட்ட செயலாளருக்கு வாழ்த்து!! அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்
வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை
சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா

May 8, 2025
113 Views
சந்தனக்கூடு திருவிழா ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
எங்களுக்குரிய மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி: விளாத்திகுளத்தில் நடைபெற்ற பரப்புரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் மலிவு விலை 4 சக்கர மினி டிரக்
குத்துக்கல்வலசையில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account