ராமநாதபுரம், ஜூன் 13-
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 ஆம் நாள் ஜமாபந்தி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கீழக்கரை உள் வட்டம் பனையடியேந்தல், வேளானூர், மாணிக்கனேரி, புல்லந்தை, மாயாகுளம், கீழக்கரை, காஞ்சிரங்குடி, குளபதம், இதம் பாடல், ஏர்வாடி வருவாய் கிராம சாகுபடி விவரம், பட்டா மாறுதல்,
அடங்கல், வறட்சி நிவாரணம், தண்ணீர் தீர்வை, சிட்டா, நத்தம் கணக்கு வருவாய் தொடர்பான பதிவேடு உள்பட அனைத்து வகை பதிவேடுகள் தணிக்கை செய்யப்பட்டன. இப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் பழனிகுமார் தலைமையில் கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் முன்னிலையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கீழக்கரை மண்டல துணை வட்டாட்சியர் பரமசிவம், தலைமை தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம், தேர்தல் துணை வட்டாட்சியர் சந்திரன், வட்ட சார் ஆய்வாளர் வினோத்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவி அலுவலர்கள் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.