தஞ்சாவூர், மே 12 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மே 14ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பதாவது: இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, நீர்ப்பாசனம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.
இதில் கருத்துகளை தெரிவிக்க விரும்புபவர்கள் தங்களது பெயர், ஊர், வட்டாரத்தை மே 14ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்று பின்னர் அளிக்க வேண்டும்.



