நாகர்கோவில், ஜன. 9 –
குமரி மாவட்டம் காளிகேசத்தில் சுற்றுசூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் சேர்ந்து சுற்றுசூழல் கல்வி திட்டத்தின் இயற்கை முகாம் நடைபெற்றது.
இதை மாவட்ட வன அலுவலர் முனைவர் அ. அன்பு துவக்கி வைத்தார்.
இதில் மாவட்டத்தை சேர்ந்த 10 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் மொத்தம் 50 பேர் பங்கேற்றனர். இதில் கன்னியாகுமரி நேச்சர் பவுண்டேசனிலிருந்து மகாதேவன், சக்திவேல் மாணவர்களை வனபகுதியில் இயற்கை நடை அழைத்து சென்று அங்குள்ள வளங்களை பற்றியும்
சம்பா கரையான் புற்று, மரங்கொத்தி கொத்திய மரம் முதலியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
பின் தேசிய பசுமை படையிலிருந்து ஜோ பிரகாஷ் காலநிலை மாற்றத்தை பற்றி கூறினார், ஷோபா வீட்டிலிருந்து வரும் குப்பைகளை வைத்து உரம் தயாரித்தல் பற்றி கூறினார். அழகியபாண்டிபுரம் வனச்சரக அலுவலர் கலையரசன் யானை ஏன் வயல்வெளியில் வருகிறது மற்றும் அவற்றின் குணத்தை பற்றி கூறினார். வனச்சரக அலுவலர் சமூக நல காடுகள் வெங்கடேசன் காடுகளின் முக்கியத்துவத்தை கதைகளோடு உரையாற்றினார்.
பின் மாவட்ட பசுமை தோழர் சாம்சன் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் வைத்தார். கலந்து கொண்ட எல்லா பள்ளிகளுக்கும் வினாடி வினாவில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் உதவி வன பாதுகாவலர் ஸ்ரீவல்சன் பரிசுகள் கொடுத்தார் இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வன அலுவலர்கள், டிரக் தமிழ்நாடு வழிகாட்டிகள் கலந்து கொண்டனர்.



