நாகர்கோவில், ஜன. 5 –
வெனிசுலா அதிபர் மதுரோவை போதை பொருள் கடத்தல் வழக்கில் நள்ளிரவில் திடீரென
கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த திடீர் நடவடிக்கையால் வெனிசுலா முழுவதும் பெரும் பதட்டமும், நிச்சயமற்ற தன்மையையும் நிலவி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் அருணாசலம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரெஜிஸ்குமார் நிறைவுரையாற்றினர். இதில் மார்க்சிஸ்ட் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு அமெரிக்கா அதிபருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.



