சென்னை, டிச. 13 –
சென்னை மேல் மூட்டு மையம் என்பது ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு பிரத்யேக சிறப்பு மையமாகும். இது தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு மற்றும் கையைப் பாதிக்கும் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது.
இந்திய எலும்பியல் அறுவை சிகிச்சைக்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்கும் இம்மையத்தில் தோள்பட்டை டாக்டர் ராம் சிதம்பரம் தலைமையிலான மருத்துவ குழு ஆர்தோ ஃபிளக்ஸ்- எச்.டி.ஏ ஐ முறையை பயன்படுத்தி நாட்டின் முதல் “ஆர்த்ரோஸ்கோபிக் ரோட்டேட்டர் கஃப் ” பழுது பார்ப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.
இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்ததாவது: “தோள்பட்டை செயல்பாட்டை மீட்டெடுப்பதிலும், சிக்கலான, பெரிய அளவிலான ரோட்டேட்டர் கஃப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் இம்மையம் சேவையாற்றி வருகிறது.
தோள்பட்டை மூட்டு ரோட்டேட்டர் சுற்றுப்பட்டையை உருவாக்கும் தசைகள் பளு தூக்குதல் மற்றும் தோள்பட்டை சுழற்சிக்கு முக்கியமானது. பெரும்பாலும் வயது முதிர்ச்சி மற்றும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் மூட்டுகள் தேய்ந்து கிழியும் தன்மை அதிகரிக்கிறது. சிறிய காயங்களுக்கு பெரிய அறுவை சிகிச்சையளிப்பதற்கு மாற்றக ஆர்த்ரோஸ்கோபிக் பழுதுபார்ப்பு (‘கீ ஹோல் அறுவை சிகிச்சை’) வடிவத்தில் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தபடுகிறது.
ரோட்டேட்டர் சுற்றுப்பட்டை அடிப்படையில் ‘மனித அலோகிராஃப்ட் பேட்ச்’ திசுக்களால் மூட்டுக்களின் இடையில் நெகிழ்வுத் தன்மையுடன் செயலாற்ற வைக்கிறது. இந்த முறையான அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கிழியும் அபாயத்தை அது குறைக்கிறது. மேலும் நோயாளிகள் அதிக வலியோ, காயங்களே இல்லாமல் விரைவில் குணமடைந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று தெரிவித்தனர்.



