கன்னியாகுமரி, அக். 13 –
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரசாதம் விற்பனை நிலையத்தில் பாக்கெட் முறுக்கு உட்பட இறக்குமதி பொருட்கள் பல படுஜோராக விற்பனை நடைபெறுகிறது. இது எப்படி அம்மன் (கோவில்) பிரசாதம் ஆனது என வெளி மாவட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் ஆன்மீக புத்தக நிலையும் என்ற பேரில் பேன்சி ஸ்டோர் செயல்படுவதாகவும், எதிலும் விலைப்பட்டியல் இல்லை எனவும் இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகத்திற்குள் தேவசம்போர்டு சார்பில் பிரசாத ஸ்டால் மற்றும் ஆன்மீக புத்தக நிலையம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதை தனியார் ஒருவர் குத்தகை எடுத்து நடத்தி வருகிறார். இங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்துமே வெளியில் இருந்து தயாரித்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. எந்த ஒரு பொருளிலும் விலை பட்டியல் இல்லை.
அவர்கள் விருப்பத்திற்கு தாராளமான ரேட் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் இங்கு விற்கப்படும் பொருட்கள் பல தரமானதாக இல்லை எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இங்கு, கோவில் பிரசாதம் என்று விற்பனை செய்யப்படும் லட்டு மிகவும் கடினமாக இருப்பதாக பக்தர்கள் புலம்பல்.
கோயில் பிரசாதத்திற்கும், விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகத்திற்கு தெரிந்தும், விற்பனையாளர்கள் கூறும் பொய் பிரச்சாரத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.
அதேபோல் ஆன்மீக புத்தக நிலையம் என்ற பெயரில் குத்தகை எடுத்துவிட்டு,ஆன்மீக புத்தகத்தை தவிர அனைத்து பேன்சி பொருட்களும் படுஜோராக விற்பனை செய்யப்படுகிறது.விலைகளும் தாறுமாறாக உள்ளது என பக்தர்கள் புலம்புகின்றனர்.
பகவதி அம்மன் கோயிலுக்குள் நடைபெற்று வரும் அநீதிகளை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்கொள்ளாதது ஏன் என புகார்கள் எழுந்துள்ளது. எனவே அறநிலை துறை அதிகாரிகள் இனியாவது நடவடிக்கை எடுத்து பக்தர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



