கோவை ஜூன் 04
கோவையில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய பின்பு அமைச்சர் டிஆர்பி.ராஜா பேட்டி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளையொட்டி கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex mla தலைமையில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு அமைச்சர் டிஆர்பி.ராஜா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஒட்டுமொத்த தமிழகம் கலைஞரை கொண்டாடி வருகிறது. கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் கலைஞர் அவர்கள் தான். ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கலைஞர் அவர்கள். இன்றைய நாளில் அவரை கொண்டாடி வருகிறோம். முதலமைச்சர தமிழகத்திற்கு மூன்றே ஆண்டுகளில் மகத்தான சாதனைகள் மகத்தான நலத்திட்டங்களை பொது மக்களுக்கு தாய்மார்களுக்கு இளைஞர்களுக்கு அற்புதமான நலத்திட்டங்களை கொடுத்து வருகிறார். மகத்தான வெற்றியை நாளை நாற்பது தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெல்லும். இதனை மக்கள் கொடுப்பார்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் மகத்தான வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் செய்து காட்டுவார். இந்த சந்திப்பின்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா கார்த்திக் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் பொருளாளர் எஸ் எம் முருகன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பகுதி மற்றும் வார்டு செயலாளர்கள் அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.