வேலூர், செப். 04 –
காட்பாடியில் சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் 10-ம் ஆண்டு மற்றும் ஆயுதபூஜை விழாவை முன்னிட்டு பழைய காட்பாடியில் சிங்கத்தமிழன் அகாடமி மாணவ மாணவிகளுக்கான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் மருத்துவர் தொல்காப்பிய செழியன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசுவதில் சிலம்ப பயிற்சி மேற்கொள்வதால் மாணவர்களின் உடல்நலம் மட்டுமல்லாமல் மனோபலமும் மேன்மை அடைகிறது என்றும், மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்களில் இருந்து விடுபட சிலம்ப விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் தொடர் உடற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு அவசியம் என்றும் பேசினார்.
அதனை தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சிகள் நிறுவனர் தலைமை பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. காட்பாடி நாட்டாண்மை பெருமாள், மாமன்ற உறுப்பினர் சீனிவாசன், தலைமை ஆலோசகர் கார்த்திகேயன், இணை பயிற்சியாளர் திவாகர், தொழில்நுட்ப இயக்குனர் விக்னேஷ்வரன், போட்டிகள் இயக்குனர் புவனேஷ், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் சன்ஜய், சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியின் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



