கன்னியாகுமரி செப் 17
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் இரவில் விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.5 லட்சத்தில் 95 அடி உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முடிவு செய்யப்பட்டு,கான்கிரீட் தூண் அமைத்து அதன் மீது ராட்சத கிரேன் மூலம் 95 அடி உயர கோபுர மின் விளக்கு நிறுவப்பட்டதுள்ளது. இந்த விளக்கு ஒரிரு நாட்களில் செயல்படத் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதன் பின்பு மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதி இரவு நேரங்களில் இரவை பகலாக்கும் வகையில் பட்டப்பகல் போன்ற மின்னொளியில் பிரகாசிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.