அனுகிரகா கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் துறை சார்பாக 8-வது பன்னாட்டு கருத்தரங்கு.
திண்டுக்கல் அனுகிரகா சமூக அறிவியல் கல்லூரியின் உளவியல்துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 8-வது பன்னாட்டு கருத்தரங்கு வருகின்ற பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் உளவியல் மற்றும் எதிர்காலம் அடிப்படையிலான வாய்ப்புகளும் மற்றும் குறித்த சவால்களும் என்ற தலைப்பின் கீழ் – செயற்கை நுண்ணறிவு பற்றி கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் உளவியல் நலம்
குறித்து ஆராய உள்ளனர்.
இக்கருத்தரங்ககிற்கு சிறப்பு விருந்தினராக டாக்டர் ஈவா டெபியாலா அவர்கள் வருகை புரிகிறார்கள். இவருடைய தொடக்க உரையுடன் விழா இனிதே தொடங்க உள்ளது . அதனைத் தொடர்ந்து நுண்ணறிவுப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் பங்களிப்பு, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்து விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களும் சிறப்பு விருந்தினரின் தலைமையில் நடைபெறும். இந்த நிகழ்வுகளை தலைமையேற்று நடத்துபவர்கள் அருள் முனைவர் லாரன்ஸ் சூசைநாதன் OFM .Cap, அருட்தந்தை ஆரோக்கியதாஸ் OFM.Cap,
மற்றும் அனுகிரகா கல்லூரியின் செயலர் அருள் முனைவர். ஜான் பிரிட்டோ OFM.Cap,
அனுகிரகா கல்லூரியின் முதல்வர் அருள் முனைவர் சே.ஜார்ஜ் பெர்னாட்ஷா OFM.Cap, ஆகியோர் சிறப்பிக்க உள்ளனர்.வரவேற்புரையினை உளவியல் துறைத்தலைவர் அருள் முனைவர் சகாயராஜ் சந்தியாகு OFM .Cap,
அவர்கள் வழங்க உள்ளனர். அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு வாயிலாக மனநலப் பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புகள், முன்கணிப்பு, பகுப்பாய்வு, நெறிமுறைக் கருத்தாய்வு , மனநலத்தினைக் கண்டறியும் கருவிகள், மனநல ஏற்றத் தாழ்வுகளை சரி செய்வதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களையும், துணைக் கருப் பொருள்களையும் பற்றிய சிறப்பு அமர்வுகள் நடைபெறும். நோயாளர்களுக்கான பயிற்சிகள், சுகாதார நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் ஆன்மீக ஆலோசனைகள் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
சுகாதாரம், சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் முன் முயற்சிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகத்தினருக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்கு கருத்தரங்கில் ஐந்து நபர்களுக்கு நம்பிக்கை நட்சத்திர விளக்கு ” என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்படும்.
பெரியார் பல்கலைக் கழகம், சென்னை பல்கலைக் கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், அழகப்பா பல்கலைக் கழகம்,அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம், திருப்பத்தூர் தூய இருதய கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் சென்னை நல்வாழ்வுமையத்துடன் இணைந்து இக்கருத்தரங்கு நடைபெற உள்ளது. உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அறிவார்ந்த விவாதங்களுக்கான ஒரு மாறுதளமாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை என தெரிவித்தனர்.