கோவில்பட்டி, ஆகஸ்ட் 16 –
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன் கரடிகுளம் கிராமத்தில் 79-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டமாக நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டியில் சுமார் 30 அணிகள் கலந்து கொண்டது. போட்டியின் அரையிறுதி போட்டியினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அணி முதல் பரிசினையும், கோவில்பட்டி வாரியர்ஸ் அணி இரண்டாவது பரிசினையும், தென்காசி மாவட்டம் மடத்தூர் அணியினர் மூன்றாவது பரிசினையும், கரடிகுளம் அணியினர் நான்காவது பரிசினையும் தட்டி சென்றனர். இந்நிகழ்வில் கம்யூனிஸ்ட் ஒன்றிய கழகச் செயலாளர் சாலமன், ஊர் நாட்டாமை முத்துச்சாமி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திமுக சந்திரன், இளைஞர் அணி கவியரசன், ராஜா பொது குடியைச் சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் சுற்றுவட்டார விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.



