By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்

Last updated: October 31, 2025 6:40 pm
October 31, 2025
37 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 31 –

சென்னை காவேரி மருத்துவமனையில் 4½ மணி பக்கவாத மீட்சித் திட்டம் பற்றிய வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கே. விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 2025 உலக பக்கவாத தினத்தையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது.

இந்நிகழ்வில் வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில்: கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இவர்களுள், 120 மேற்பட்ட நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 4 ½ மணி நேரங்களுக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர். இவர்களுள் 82 மேற்பட்ட நபர்களுக்கு பக்கவாதத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது.

“பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும் போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது. கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன. ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிற போது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் மற்றும் சுதந்திரமாக வாழவும், அவர்களது அவசியமான திறனை சேதமின்றி பாதுகாத்து எங்களால் காப்பாற்ற முடியும். இத்தகைய பெரிய பாதிப்பு நிகழ்விற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து முழுமையான மீட்சி பெற்று, இத்தகைய நோயாளிகள் நலமுடன் நடந்து செல்வதை பார்ப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கிறது” என்று கூறினார்.

ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி. சதீஷ் இது குறித்து கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகளில், பக்கவாதத்திற்கான சிகிச்சையில் புரட்சிகரமான பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிரை ஊடாக செலுத்தப்படும் “இரத்த உறைவுக் கட்டியை உடைக்கும் மருந்துகள் (க்ளாட் பஸ்டர்) மற்றும் இயந்திர வழி இரத்தக்கட்டி நீக்கம் என்பவை நவீன சிகிச்சை உத்திகளுள் சிலவாகும்.

சென்னை மாநகரில், ஆழ்வார்பேட்டை, வடபழனி மற்றும் ரேடியல் சாலை ஆகிய அமைவிடங்களில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் பக்கவாத மீட்பு சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. மிக நவீன இமேஜிங் சாதனங்கள், இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளுக்கான அறைகள் மற்றும் தீவிர பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை ஒருங்கிணைந்து, சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்குகின்றன என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
களியக்காவிளை அருகே இசக்கி அம்மன் கோவிலில் 36 கிலோ வெண்கல விளக்கு திருடிச் சென்றவர் கைது
திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அக்னி பரீட்சை நடக்கும்: ஈரோட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
கன்னியாகுமரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு; மரியாதை செலுத்திய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்

April 6, 2025
51 Views
மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்
கொல்லங்கோடு அருகே தந்தை, மகளைத் தாக்கிய பட்டதாரி வாலிபர் கைது
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
காணொளிக்காட்சியின் வாயிலாக சாகச சுற்றுலாத்தலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account