கொல்லங்கோடு, ஜன- 20
கொல்லங்கோடு அருகே மணலிக்கரை பகுதி சேர்ந்தவர் அஜித்குமார் (47). ராணுவ வீரர். அந்தமானில் தற்போது பணியில் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஹைதராபாத் சென்றிருந்தனர். நேற்று முன்தினம் 18-ம் தேதி இரவு அவர்கள் மீண்டும் திரும்ப வந்தபோது வீட்டின் முன்பக்கம் கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த பேது பீரோவில் இருந்த 22 பவுன் தங்க நகைகள் மேலும் ரூபாய் 12 ஆயிரம் திருடப்பட்டிருந்தன. இது குறித்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
நேற்று 19ஆம் தேதி காலை கை ரேகை நிபுணர்ள் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.