திருப்பத்தூர், ஜூலை 27 –
இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை அங்கீகரிக்க கலை இலக்கியம் கல்வி விளையாட்டு மருத்துவம் சமூக சேவை அறிவியல் பொறியியல் மத்திய அரசு பணி தொழில் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. 2027 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தனது வாழ்நாளில் தனித்தன்மையுடன் சிறப்பாக சாதனை செய்பவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் இவ்விருது எப்பொழுதும் உயரிய சாதனை செய்பவருக்கே வழங்கப்படும் இந்த விருது விண்ணப்பிப்பவர்கள் சாதனை எல்லோராலும் விரும்பத்தக்கதாக இருக்க வேண்டும் இவ்விருது உயர்ந்த தர நிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படும்.
பத்ம விருதுகள் நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதாக இருப்பதால் இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே அவர்கள் துறையில் தேசிய விருதோ அல்லது குறைந்தபட்ச மாநில விருதோ பெற்றிருக்க வேண்டும். இவ்விருதுக்கு உரிய வரை தேர்ந்தெடுக்கப்படும் போது சமூகத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பெண்கள். நலிவடைந்த சமுதாயத்தினர். தாழ்த்தப்பட்டவர்கள். சீர் மரபினர் மாற்றுத் திறனாளிகள் இவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பரிந்துரை செய்யப்படும்.
சிறந்த சாதனையாளராக இருந்து இறந்தவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுவதில்லை. எனினும் மிகுந்த தகுதியானவர்களுக்கு இந்த விருது அறிவிக்கும் தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் இறந்திருந்தால் இவ்விருது பரிசீலிக்கப்படலாம்.
விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே பத்ம விருது பெற்றவராக இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க இவ் விருது பெற்ற நாளிலிருந்து ஐந்து வருடத்திற்கு பிறகு விண்ணப்பிக்க முடியும் எனினும் மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு காலக் கட்டுப்பாட்டில் விதிவிலக்கு அளிக்கப்படும் அரசு பணியாளர் பொது நிறுவனத்தில் வேலை செய்பவர்களில் மருத்துவர். விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது.
இந்த தகுதிகளுடையவர்கள் விண்ணப்ப படிவத்தை http://awardsgov.in/ என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதே இணையதளம் மூலம் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதிற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.



