நாகர்கோவில், ஜுலை 29 –
அடுத்த ஆண்டு நடைப்பெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் இப்போதே பலரும் ஆர்வத்துடன் செயல்பட தொடங்கி விட்டார்கள். அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளார். பிரதான கட்சிகளின் ஆதரவுடன் தான் போட்டியிட வேண்டும், இல்லாவிட்டால் போட்டியிட வேண்டாம்.
மேலும் கூட்டணிக்கான முயற்சிகளை நாங்கள் மேற் கொள்கிறோம் என்று அகில இந்திய மீனவர் சங்கத்தின் தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட்டு வரும் அகில இந்திய தமிழர் கழகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும் அன்டன் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், அகில இந்திய தமிழர் கழகம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. திமுக ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம். இல்லாத பட்சத்தில் தவெக – அதிமுகவை நாடுவோம். தனித்து போட்டியிடுவதில் விருப்பம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.