வேலூர்_13
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், சத்தியமங்கலம் மதுரா ,இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஏரிக்கரை ஸ்ரீ செல்வ விநாயகர் ,ஸ்ரீ கன்னியம்மன், ஸ்ரீ தஞ்சிஅம்மன், வேங்கைக்கு, 19ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆடி திருவிழாவில் அபிஷேகமும், அலங்காரமும் , பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், தலைவர் மற்றும் செயலாளர் ஆனந்தன், பொருளாளர் பழனி ,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு, அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் கோ. குமாரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், புதூர் சத்தியமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் சிவா, மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், பலர் கலந்து கொண்டனர்.