மதுரை டிசம்பர் 23,
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழக காவல் துறையில் 1999 ஆண்டு பணியில் சேர்ந்து மதுரை மாநகர் S.S.காலனி காவல் நிலையத்தில் பணிபுரிந்து உடல்நிலை குறைவால் மறைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலமுருகன் என்பவருடைய குடும்பத்தினருக்கு 1999 பேட்ச் உதவும் உறவுகள் சார்பாக அவருடன் பணியில் சேர்ந்த காவல் நண்பர்கள் வசூலித்த பணம்
ரூ.13,70,000 க்கான காசோலையை நேரில் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் வழங்கினார். இந்நிகழ்வில் 1999 பேட்ச் காவல்துறை நண்பர்கள் கலந்து கொண்டனர்.