வேலூர்_29
வேலூர் மாவட்டம் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, காட்பாடி வட்டம், காங்கேயநல்லூர் ஞானத்திருவளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன். வேலூர் மேயர் திருமதி சுஜாதா ஆனந்தகுமார். துணை மேயர் எம். சுனில் குமார். மண்டலக்குழுத் தலைவர் திருமதி புஷ்பலதா வன்னிய ராஜா, அறங்காவலர் குழுத்தலைவர் பரமசிவம், மாநகராட்சி ஆணையாமார் திருமதி ஜானகி ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.