வேலூர் 09
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த சலவன்பேட்டை சாதுகாரமடம் சித்தர் பீடம் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சாதுகார சுவாமிக்கு 111 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் அவதூதா ஸ்ரீ சாய் விபூதி அம்மா கேதார்நாத் உத்தரகாண்ட் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் இவ்விழாவில் கலச ஸ்தாபிதம் மகேஸ்வர பூஜை, சங்கு அபிஷேகம், மகாதீப ஆராதனை ,மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் ஆர். முரளி மோகன், முன்னிலையில் நடைபெற்றது . குருபூஜை விழாவில் ஆலய நிர்வாகிகள் விஜயகுமார் ,மாலதிகுமார், ஜெய செந்தில் ,வெங்கடேசன் ,எல் .சிவகுமார், ஆர். சுப்பிரமணி, ஜி .தேவன் ,ஆர். ஜெயவேலு ,மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.