தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்துள்ள ஐந்தருவி சாலையில் அப்துல்காதர் என்பவரது வீட்டின் பின்புறம் பெரிய வகையிலான பாம்பு இருப்பதாக தீயணைப்பு துறைக்கு வந்த தகவலையடுத்து உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் ஜெயரத்தினகுமார், சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து ஜெயபிரகாஷ் பாபு, மற்றும் ராஜ்குமார், வெள்ளபாண்டி ,கார்த்திகேயன், சிவசண்முகராஜா, ஆகியோர் விரைந்து சென்று மரக்கிளையில் இருந்த பாம்பை கீழே இறக்க தண்ணீர் பீச்சியடிக்க அதன் பிறகு மரத்தில் இருந்து இறங்கி நீண்ட நேரம் போக்கு காட்டியதை தீயணைப்புத்துறையினர் சற்றும் சளைக்காமல் நீண்ட நேரம் போராடி 10 அடி நீளமுள்ள ராஜநாகத்தை 3 மணி நேர போராட்டத்தின் முடிவில் லாவகமாக பிடித்தனர் பின்னர் குற்றாலம் அடர்வன பகுதியில் இந்த பாம்பை விட்டனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது, இந்நிகழ்வின் போது தீயணைப்புத்துறை தன்னார்வ தொண்டர்கள் உடனிருந்தனர்.
ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics