மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கட்டண படுக்கை சிகிச்சைப் பிரிவுகள் விபத்து மற்றும் சிகிச்சைப்பிரிவில் 8 படுக்கைகளும் (4 Deluxe Room + 4 single room), பன்நோக்கு உயர் சிகிச்சைப் பிரிவில் 8 (3 Deluxe Room + 5 single room) படுக்கைகளுடன் கடந்த 2023 மார்ச் மாதம் 2-ம் தேதி தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது. கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவில் தற்போது வரை 919 நோயாளிகள் மற்றும் உடனிருப்போர் பயனடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாக இதுவரையில் Rs.1,01,35,200/- ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சத்து முப்பத்தி ஐந்தாயிரத்து இருநுாறு ரூபாய் படுக்கை கட்டணமாக பெறப்பட்டுள்ளது. இச்சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு அறைகளிலும் உள்ள குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி, மெத்திருக்கைகளுடன் கூடிய இருக்கைகள், சுடுதண்ணீர் water Heater மற்றும் R.O. Water வசதிகளுக்காக மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், சிகிச்சைகளுக்கு தனிக் கட்டணம் ஏதும் கிடையாது. அரசு இராசாசி மருத்துவமனை முதல்வரின் வழிகாட்டுதலின்படி நிலைய மருத்துவர் அவர்களுடைய நேரடி மேற்பார்வையில் கட்டண படுக்கை சிகிச்சைப்பிரிவு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
கட்டண படுக்கை சிகிச்சை பிரிவு ஒரு கோடி ரூபாய்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics