குளச்சல், ஆக.3 –
மனவளக்குறிச்சி ஐ ஆர் இ எல் நிறுவனம் சார்பில் வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றின்கரை சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு ஐ ஆர் இ எல் தலைவர் செல்வராஜன் தலைமை வைத்தார். வெள்ளி மலை பேரூராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 483 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 234 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஊர் தலைவர் வேல்முருகன், டாக்டர்கள், ஐ ஆர் இஎல் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.