கோவை மே 21
பொள்ளாச்சி நகர எஸ் .எஸ். கோவில் வீதியில் அமைந்துள்ள வி .எஸ் .ஆர் . ஏ நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒருவரை ஒருவர் நெகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியை சர்வ மங்களதேவி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் வேலுச்சாமி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடந்த 1985 -86 ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர்கள் பேசும்போது..
சுமார் 30 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த பள்ளியில் படித்த ஞாபகங்கள் அவ்வளவு பசுமையாக இருக்கிறது என்றும், இந்த பள்ளியில் பயின்ற எல்லா மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய ஒரு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்த்துவதற்கான முழு ஏற்பாட்டையும் செய்து வருவதாகவும், மேலும் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் மூலம் நாங்கள் பயின்ற பள்ளிக்கு ஏதாவது நலத்திட்ட உதவிகளும் பல்வேறு வகையில் உதவுவதாக திட்டமிட்டு இருப்பதாகவும் மகிழ்வோடு கூறினார்கள் முடிவில் முன்னாள் மாணவர் அ.காதர் ஒளி அவர்கள் நன்றி கூறினார்.