வேலூர், ஜூன் 12 –
வேலூர் மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயி அமைப்பு பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் ரகு தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி குறித்து காட்பாடியில் இருந்து வேலூர் வரை ஆட்டோ கார் மூலமாக விழிப்புணர்வு ஊர்வலமாக சென்று துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள், மேலிட பொறுப்பாளர்கள், அரக்கோணம் கௌதமன், போளூர் செல்வம், வெளிச்சம் பிரவீன், வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் வேலூர் பிலிப் ஆகியோர் பேரணியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள், வேலூர் மாவட்ட துணைச் செயலாளர்கள் இளங்கோ, பிரேம்குமார்,மகளிரணி மாவட்டச் செயலாளர் மலர்கொடி, இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஜாபீர், கிறிஸ்துவ ஐக்கியப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் ஆல்பர்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.