போகலூர், ஆகஸ்ட் 3 –
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழகம் முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கையுடன் தமிழகம் முழுவதும் சூறாவளி சுட்டு பயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டாம் கட்ட சூறாவளி பிரச்சாரம் பயணம் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது.
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சர்ச் அருகே சாலை வீதியில் இருந்து பிரச்சாரக் கூட்டம் நடைபெறும். அரண்மனை வரை மண்டபம் மேற்கு ஒன்றியம் செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன் ஏற்பாட்டில் இளைஞர்கள் சுமார் 2000 பேர் மட்டும் பெண்கள் முளைப்பாரி சுமந்து ஆடல் பாடலுடன் உற்சாகமான வரவேற்பு அளித்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோட் ஷோ நடத்தியவாறு அழைத்துச் சென்றனர்.
பிரச்சார வாகனத்தில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழி நெடுக இரு புறமும் அலைகடலென திரண்டு நின்ற மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து இரட்டை இலை சின்னத்தை காண்பித்தவாறு சென்றார். மக்கள் பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமியை நோக்கி இரட்டை விரல் காண்பித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் முதற்கொண்டு குறிப்பாக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன் மிகுந்த ஆனந்தத்துடன் இளைஞர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக வரவேற்று அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றார்.
மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஜி. மருது பாண்டியன் ஏற்பட்டில் இளைஞர்கள் இளம் பெண்கள் ஆண்கள் பெண்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு வந்து அரண்மனையில் இரட்டை இலை பதாகைகள் கையில் ஏந்தி “எடப்பாடியார் வாழ்க” என்று கோசமிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.