ராமநாதபுரம், செப். 5 –
ராமநாதபுரத்தில் தேசியத் தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அரண்மனையில் அலங்கரிக்கப்பட்டஅவரது திருவுவ படத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற தேசிய தலைவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 154 வது ஜெயந்தி விழாவில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ரியல் எஸ்டேட் தலைவர் ஜெயபாண்டியன், வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் நிறுவனர் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன், மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, நான்காம் தமிழ்ச் சங்கம் தலைவர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, நகரச் செயலாளர் பால்பாண்டியன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், பா.ஜ.க மாவட்டத் தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சண்முகநாதன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாராம் பாண்டியன், தமிழ்நாடு யாதவ மகா சபை மாநில பொதுச் செயலாளர் தொழிலதிபர் வேலு மனோகரன், மாவட்டத் தலைவர் கேலக்ஸி பாலா, தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா, டாக்டர்கள் தினேஷ் முகில், பரணி குமார், சிவக்குமார், தொழிலதிபர் நல்லமுத்து, மூத்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், டாக்டர்கள், பொறியாளர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் மாவட்டத் தலைவர் அஜித் குமார் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மனோஜ் குமார், சபரி ராஜ்,
மாவட்ட செய்தி தொடர்பாளர் வஉசி ஆர். செந்தியா பிள்ளை, மாவட்ட அரசு ஊழியர் பிரிவு சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்து விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் உத்திரகோசமங்கை மட்டிய ரேந்தல், முதுகுளத்தூர், தொருவளூர், ஆர் காவனூர், மண்டபம், ராமேஸ்வரம், சாயல்குடி, கமுதி, பார்த்திபனூர், போகலூர், தங்கச்சி மடம், கே.வலசை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வெள்ளாளர் நலச்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.



