வேலூர், ஜூலை 12 –
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் வட்டம், மேல்காவனூர் மதுரா, சீத்தாராமன் பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மனுக்கு கூழ் வார்த்தலும் காப்பு கட்டுதல், சிரசு ஊர்வலமும், வீர சிலம்பாட்டம், கண் திறப்பு நிகழ்ச்சியும், மேள தாளங்கள் முழங்க சிரசு ஏற்றுதல் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆலய விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.