முதுகுளத்தூர், செப். 30 –
முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் ஆதனங் குறிச்சி மற்றும் காத்தாகுளம் பூத்தமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.டி. செந்தில்குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா எஸ். பாண்டியன் முன்னிலை வகித்தார். விருதுநகர் மண்டல தகவல் தெரழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர். பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பி. யூனுஸ் முகம்மதுஷா, கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மு. சுந்தரபாண்டியன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ராஜசேகர், முத்துராமலிங்கம், முத்துமணி, மாடசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.



