சென்னை, மே – 04,
“மியா பை தனிஷ்க் ” தமிழகத்தில் நான்கு புதிய புதிய ஷோரூம்கள் தொடங்கப்பட்டன. சென்னையில் புரசைவாக்கம் ,அடையாறு வேளிச்சேரி என மூன்று இரங்களிலும் நாள்காவதாக திருப்பூரிலும் தொடங்கப்பட்டன. சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் தொடங்கப்பட்ட “மியா பை தனிஷ்க்” ஷோரூமை நிறுவனத்தின் வணிகத் தலைவர் ஷியாமளா ரமணன் , தனிஷ்க் ஜூவல்லரி பிரிவு தெற்கு மண்டல வர்த்தக மேலாளர் – ஒய்.எல்.நரசிம்மன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். “மியா பை தனிஷ்க்” ஷோரூமில் தங்கம் பிளாட்டினம், வெள்ளி நகைகள் அணிகலன்கள் வாடிக்கையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தொடக்க விழாவில் ஷியாமளா ரமணன் ஒய்.எல்.நரசிம்மன் ஆகிய இருவரும், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் மட்டும் 12 புதிய ‘மியா பை தனிஷ்க் “கின் பிரத்தியேக விற்பனை நிலையங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இங்குள்ள நவீன யுக பெண்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருப்தி பெரும் வகையில் எங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறோம். இந்தியா முழுவதிலும் உள்ள 180 ஷோரூம்களில் 5000 க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளன. இந்த ஷோரூமில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட டிசைன்கள் காட்சிபடுத்தப்பட்டுள்னை. ஆன்லைனில் பெற விருப்புவோருக்கு அனைத்து டிசைகள் மட்டுமின்றி புதிய டிசைன் நகைகள் வடிவமைத்து தரப்படும் என்று தெரிவித்தனர்.