விளாத்திகுளம், ஜூலை 14 –
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குப் பள்ளியின் தாளாளர் அருட்திரு. ஜெயந்த் ஜோசப்ராஜ் அடிகளார் தலைமை தாங்கினார். வேம்பு மக்கள் சக்தி இயக்கம் பிரதர். சகாயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலய நிர்வாகஸ்தர்கள் அருள்ராஜ் வின்சென்ட் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி இராமனூத்து பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். விழாவில் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் முத்துமணி, மாரியப்பன், பரமசிவன் அருண் மற்றும் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியர் அமலாராணி நன்றி கூறினார். இவ்விழாவில் பெற்றோர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.