காஞ்சிபுரம், ஜுலை 1 –
காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு அருள்மிகு ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு. செல்வப்பெருந்தகை, கோயில் பரம்பரை தர்ம கர்த்தா மணலி சீனிவாசன் ஆகியோர் இணைந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
உடன் பொறியாளர் குமார், மாங்காடு தலைவர் சுமதி முருகன், துணைத் தலைவர் ஜபருல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மாங்காடு சீனிவாசன், மதிமுக செயலாளர் முருகன், நகர் மன்ற உறுப்பினர்கள் பெருமாள்ராஜ், கதிரவன், கணபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக அரசு அதிகாரி பாலு நன்றி தெரிவித்தார்.