மதுரை, ஜூன் 28 –
மதுரை கோ.புதூர், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி. மதுரை மாநகர் காவல் ஆணையரின் உத்தரவுக்கிணங்க மதுரை கோ.புதூர் இ1 காவல் நிலையம் சார்பில் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அண்ணாநகர் சரக உதவி ஆணையர் சிவசக்தி தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். புதூர் காவல் ஆய்வாளர் திலீபன் மாணவர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். சார்பு ஆய்வாளர்கள் மாயன், தங்கம், இளையராஜா, ஞானசேகரன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.